சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

60 அடியில் கட் அவுட்! நயன்தாராவுக்கு முன் யார்?

நயன்தாராவுக்குப் பெரிய கட் அவுட்...

நயன்தாரா, ராதிகா சரத்குமார்

Updated On :

நடிகை நயன்தாராவுக்கு 60 அடியில் பெரிய கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அம்மனாக நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

இப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை செம்பரம்பாக்கத்திலுள்ள திரையரங்கம் ஒன்றில் நடிகை நயன்தாராவுக்கு 60 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. நடிகர்களுக்கு இணையாக நடிகை நயன்தாராவுக்கு கட் அவுட் வைக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இதுவே, இந்தியாவில் நடிகைக்காக வைக்கப்பட்ட கட் அவுட்களில் பெரியது என்றும் கூறப்படுகிறது.

கடைசியாக, தாய்கிழவி திரைப்படத்திற்காக நடிகை ராதிகா சரத்குமாருக்கு சென்னையில் 50 அடி கட் அவுட் வைக்கப்பட்டது. இதற்கும் முன்பாக ஆந்திரத்தில் நடிகைகள் சமந்தா (யசோதா, சகுந்தலம்) மற்றும் கீர்த்தி சுரேஷ் (நடிகையர் திலகம்) ஆகியோருக்கு 40 - 50 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

A large cutout of actress Nayanthara has been placed at 60 feet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.