ராமாயணாவில் குறைகளைத் தேடாதீர்கள்: யஷ்
ராமாயணா திரைப்படம் குறித்து பேசிய யஷ்....

நடிகர் யஷ்
நடிகர் யஷ் ராமாயணா திரைப்படத்தில் வேண்டுமென்றே குறைகளைத் தேடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள ராமாயணா வருகிற நவ. 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
ராமாயணத்தைத் தழுவி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அதிக பொருள்செலவில் உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் பங்களிப்பில் ஆச்சரியப்படும் வகையில் இந்த ராமாயணா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வில் பேசிய நடிகர் யஷ், “தனிப்பட்ட முறையில் நான் கோரிக்கை வைக்கிறேன்; ராமாயணா திரைப்படத்தில் விஎஃப்எக்ஸ் போன்ற குறைகள் குறைகள் ஏதாவது இருக்கிறதா? எனத் தேடாதீர்கள். இதுபோன்ற திரைப்படங்கள் மீண்டும் நிகழாது. படத்தின் தயாரிப்பாளரான நமித் மல்ஹோத்ரா போன்றவர்கள் மிகவும் அரிதானவர்கள். இவர்களை இழந்தால் இந்திய சினிமா சில ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும். இத்திரைப்படம் நன்றாக இருந்தால் அனைவரும் இணைந்து இதனை உலகிற்கே எடுத்துச் செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Yash has appealed to people not to deliberately find flaws in the movie Ramayana.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


