ஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!6-வது தங்கம் வென்ற இந்தியா! தடகளத்தில் சாதித்த சிம்ரன் ஷர்மா!

கதாநாயகனாக அறிமுகமாகும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் குறித்து...

Devi Sri Prasad movie poster

தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ்

Updated On :

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பான் இந்திய படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ’எல்லம்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வேணு எலிடன்டி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், பாக்யஸ்ரீ போர்ஸ், அனந்திகா சனில்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கிராமிய கதையாக உருவாகி வரும் இந்தப் படம் மீது அதீத எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இசையமைப்பாளராக தமிழ், தெலுங்கில் என 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 47 வயதாகும் தேவி ஸ்ரீ பிரசாத் முதல்முறையாக நாயகனாக நடிக்கிறார்.

முன்னதாக படங்களில் பாடல்களில் சில காட்சிகளில் வந்து நடித்துவந்தார். கடைசியாக மிஸ்டர் பச்சன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

Summary

Music composer devi sri prasad to make his debut as the protagonist..! Release date announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.