6-வது தங்கம் வென்ற இந்தியா! தடகளத்தில் சாதித்த சிம்ரன் ஷர்மா!டெங்கு பாதிப்புகளை தடுப்பதற்கான ஆய்வுகள் தொடக்கம்: அமைச்சர் அருண்ராஜ்பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்

கரீஷ்மாவை ஒரு ப்ரோமோவில் கூடக் காணவில்லை! பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கரீஷ்மாவின் ஆட்டம் கவனம் பெறாதது குறித்து...

Bigg boss 10 tamil Karisma

டிடிஎஃப் வாசனுடன் கரீஷ்மா - எக்ஸ்

Updated On :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்த கரீஷ்மா, ஒரு முன்னோட்ட (ப்ரோமோ) விடியோவில் கூட இடம்பெறவில்லை என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தபோது தனது ஆட்டம் நெருப்பாக இருக்கும் என விஜய் சேதுபதியிடம் கூறிவிட்டு கரீஷ்மா வந்திருந்தார். முதல் வாரம் மட்டுமே ஷமா மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி முன்னோட்ட விடியோவில் இடம்பெற்றார். அதன் பிறகு வரும் முன்னோட்ட விடியோக்களில் கூட இடம்பெறவில்லை என அவரின் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 6வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் ஆளும் அணி, எதிர் அணி என எதுவும் இல்லை. பிக் பாஸில் இந்த அந்த பழைய விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க சிவப்பு அணி, நீல நிற அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் சிவப்பு அணித் தலைவராக அவினாஷ், நீல நிற அணித் தலைவராக வினோத் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், சிவப்பு நிற அணியில் கரீஷ்மா இடம்பெற்றுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக டிடிஎஃப் வாசன், அக்‌ஷிதா ஆகியோர் நுழைந்தபோது, காமன்மேன் பிரிவில் இருந்து கரீஷ்மா கலந்துகொண்டார்.

ஏற்கெனவே காமன்மேன் பிரிவில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜேசன், முனியம்மாள், ஷமா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து வருவதால், கரீஷ்மாவும் அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

கரீஷ்மா

கரீஷ்மா - எக்ஸ்

ஆனால், அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வாரம் தவிர மற்ற வாரங்களில் அவர் பெரிதாக கவனம் பெறவில்லை. இதனால், எந்தவொரு முன்னோட்ட விடியோவிலும் கரீஷ்மா இடம்பெறவில்லை. இதனை சுட்டிக்காட்டி அவரின் ரசிகர்கள் ஒவ்வொரு முன்னோட்ட விடியோவிலும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Bigg boss 10 tamil Karisma is not even seen in a promo

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.