இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் “அப்பா குட்டி” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் புதிய படம் “அப்பா குட்டி”. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், தந்தை மற்றும் மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவானதாகத் தெரியவருகிறது.
நடிகர்கள் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன், ஹரிபிரியா, லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், விஜய் ஆண்டனி இசையமைக்கும் “அப்பா குட்டி” படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் இன்று (மே 21) வெளியிட்டுள்ளனர்.
இத்துடன், தெலுங்கு மொழியில் “நாநாகுட்டி” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The first-look poster for the film "Appa Kutty," starring Vijay Antony as the lead, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிராம வாழ்க்கைக்குத் திரும்பும் விஜய் ஆண்டனி!
நூறு சாமி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

அம்மா அம்மாதான் பாடல்!

காவியக் காதல் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



