திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைவோரை விடியோ எடுக்கவேண்டாம் என்று ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த கருப்பு திரைப்படம் மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் முதல் 3 நாள்களில் 147 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
நாட்டார் தெய்வமான கருப்பசாமி குறித்த திரைப்படம் என்பதால் தமிழகம் முழுக்க பல திரையரங்குகளில் படம் பார்த்த மக்கள் பரவசமடைந்து சாமியாடும் விடியோக்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:
திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியோகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுருத்த அன்போடு வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Suriya has appealed to fans do not video-record people possessed by spirits while watching Karuppasamy in theaters.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல்கார கருப்பு மேக்கிங் விடியோ!

காவல்கார கருப்பு மேக்கிங் விடியோ!

கண்ணுங்களா... செல்லங்களா... விடியோ வெளியிட்ட சூர்யா!

சும்மா தெறிக்குது... கருப்பைப் பாராட்டிய கார்த்தி!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




