பாடகி ஸ்வாகதா தனக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பேசியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடகி ஸ்வாகதா கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். பாடகியாக மட்டுமல்லாது இசையமைக்கவும், இசைக்குழுவை ஒருங்கிணைக்கவும் தெரிந்த கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் இவர் பாடிய, ‘ஆலாலிலோ’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சில நாள்களுக்கு முன் நேர்காணலில் பேசிய ஸ்வாகதா 7 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்தபோது பிரபல இசையமைப்பாளரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அதனை ரகசிய கேமராவில் எடுத்து மிரட்டியதாகவும் கூறினார். மேலும், இன்னும் அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஸ்வாகதா நேரடியாக அந்த இசையமைப்பாளர் யாரெனத் தெரியப்படுத்தவில்லை என்றாலும் பலரும் ஓர் இசையமைப்பாளரைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஸ்வகதா 2012 ஆம் ஆண்டு என் தொலைக்காட்சி நிகழ்ச்சியான, "பாடவா டூயட் பாடலை" மூலம் அறிமுகமானார். எங்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர், எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாகிவிட்டார். அதன்பின், அவருடனான தொடர்பை இழந்தேன். இப்போது ஊடகங்களில் அவர் தன் கண்ணியத்தை பாதுகாத்து பேசுவதை பார்க்கிறேன். அவர் தனது போராட்டத்தில் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
இதனைப் பகிர்ந்த ஸ்வாகதா, “நான் எப்போதும் உங்கள் குழந்தைதான் சார். உங்கள் ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவனை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

சென்னையின் எப்ஸ்டீன்! யார் அந்த இசையமைப்பாளர்?

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


