மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்?

பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து...

News image

பிரதீப் ரங்கநாதன் - production

Updated On :30 மார்ச் 2026, 9:23 am

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ரு.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளன. இவர் நடித்த எல்ஐகே திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அடுத்ததாக, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதுடன் அதில் நாயகனாகவும் பிரதீப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பிரதீப் தயாரிப்பு நிறுவனம் துவங்கவுள்ளதாகவும் இதன் முதல் திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மைத்ரி மூவிஸ் நிறுவனத் தயாரிப்பில், ‘செக், சாகசம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் சந்திர சேகர் யெலட்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கில் இப்படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் உள்ளது போலவே பிரதீப் ரங்கநாதனுக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

actor pradeep ranganathan might joins telugu movie director

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.