மதராஸி திரைப்படத்தால் இழப்பு ஏற்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் ஏ. ஆர். முருகதாஸ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளதாம்.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படம் ரூ. 60 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
வித்யூத் ஜம்வான் வில்லனாக நடித்த இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் நன்றாக இருந்தாலும் கதையாக சில சொதப்பல்கள் இருந்ததால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்த நிலையில், மதராஸி திரைப்படத்தை ரூ. 110 கோடியில் எடுத்து தருவதாகக் கூறி ரூ. 170 கோடி வரை செலவு செய்ய வைத்ததாக படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீ லட்சுமி பிரசாத் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏ. ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளாராம்.
அப்புகாரில், ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்ட ஈடாக ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 10 கோடியை வழங்க வேண்டும் அல்லது ரமணா - 2 (தெலுங்கு வடிவம்) திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை எழுதி அதன் உரிமையைத் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.
Summary
The production company has filed a complaint against A. R. Murugadoss with the Producers Council, alleging that the film Madrasi caused losses.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போலி என்ஜின் ஆயில் தயாரிப்பு: 2 போ் கைது!
கடலாடியில் போலி வழக்குரைஞா் கைது

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி

நாமக்கல் கோழிப் பண்ணையாளா் சங்கத்தில் திமுக, அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

