எல்ஐகே திரைப்படத்திற்கான புரோமோ விடியோவை தயாரித்துள்ளனர்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான “எல்ஐகே” திரைப்படம் கடந்த 2025 அக்டோபர் வெளியீடாகத் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டது.
ஆனால், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட, பிரதீப் நடித்த டியூட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்படமானது.
பின், இந்தாண்டு காதலர் நாள் வெளியீடாக எல்ஐகே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. அண்மையில், ஏப்ரல் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
புதிய தகவலாக எல்ஐகே திரைப்படத்தை ஏப். 10 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, கிருத்தி ஷெட்டி, சீமான், ஷாரா, கௌரி கிஷன், மாளவிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் வெளியீட்டைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கான புரோமோ விடியோவை எடுத்து முடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், பிரதீப், விக்னேஷ் சிவன், அனிருத் ஆகியோர் இடம்பெறவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Summary
pradeep ranganathan's lik movie promo ready to out
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலவையான விமர்சனங்களையே பெற்ற எல்ஐகே!

தீமா... தீமா... தேறுமா? பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே - திரை விமர்சனம்!
எல்ஐகே டிரைலர்!

4ஆவது முறையாக ரூ.100 கோடி வசூலுக்கு தயாரான பிரதீப் ரங்கநாதன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


