நடிகர் ரவி மோகனின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைப் பிரிந்து பாடகி கெனிஷாவுடன் வாழ்த்து வருகிறார். மேலும், தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி 4 படங்களைத் தயாரிப்பதுடன் யோகி பாபுவை வைத்து ஆன் ஆர்டினரி மேன் என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
இதற்கிடையே, ஆர்த்தியை விட்டு கெனிஷாவுடன் சென்றுவிட்டார் என பலரும் ரவி மோகனை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வசைபாடி எதிர்மறையான எண்ணங்களைப் பதிவிட்டனர்.
இந்த நிலையில், இதனைக் குறிப்பிட்டு ரவி மோகன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் நிம்மதியாக என்னைக் கட்டமைத்து வருகிறேன். திரும்பவும் உங்களிடம் சொல்கிறேன், நீங்கள் எப்போதும் பெண்கள்தான் சரியானவர்கள் என நினைக்கிறீர்கள். உண்மையில், ஆண்கள்தான் பாதிக்கப்படுபவர்கள். இதை நம் நீதித்துறையும் உணர்ந்தே இருக்கிறது.
என்னால் நேசிக்கப்பட்டவர்களுக்காக நான் என்ன செய்தேன் என்பதை நீங்கள் அனைவரும் ஒருநாள் புரிந்துகொள்வீர்கள். உங்களின் அருவருப்பான எண்ணங்களை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள். நான் என் வழிக்குத் திரும்புகிறேன். வாழ விடுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
actor ravi mohan writes about the negativity and personal life decisions
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அறிமுக இயக்குநருடன் இணையும் ரவி மோகன்!

புலம்பும் த்ரிஷா... என்ன ஆச்சு?

நானும் பா. இரஞ்சித்தும் பரம்பரை எதிரிகளா? வைரலாகும் மோகன். ஜி பதிவு!

கோவாவில் குடியேறும் ரவி மோகன்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


