மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நடிகை வைஷ்ணவியின் புதிய தொடர்! லட்சுமி மெஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் -2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட வெற்றித் தொடர்களை இயக்கிய டேவிட் சார்லி இந்தத் தொடரை இயக்குகிறார்.

News image

வைஷ்ணவி - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :11 மார்ச் 2026, 10:01 am

பொன்னி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகை வைஷ்ணவி, புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்தத் தொடருக்கு லட்சுமி மெஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுட்டும் விழிச் சுடரே, கனா கண்டேனடி, அழகே அழகு என அடுத்தடுத்து புதிய தொடர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றன. இவை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளன.

தற்போது நடிகை வைஷ்ணவி நாயகியாக நடிக்கும் புதிய தொடர் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடரில் வைஷ்ணவியுடன் வசந்த் வசி, ஷங்கரேஷ், மகேஷ், அஜித் என பலதரப்பட்ட நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

வசந்த் வசி, வைஷ்ணவி

வசந்த் வசி, வைஷ்ணவி - படம் - இன்ஸ்டாகிராம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துப் புகழ் பெற்ற ஜோடியான நிரோஷா - ஸ்டாலின் இணை, இந்தத் தொடரிலும் சேர்ந்து நடிக்கின்றனர்.

நிரோஷா, ஸ்டாலின்

நிரோஷா, ஸ்டாலின் - படம் - இன்ஸ்டாகிராம்

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் -2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட வெற்றித் தொடர்களை இயக்கிய டேவிட் சார்லி இந்தத் தொடரை இயக்குகிறார். ஸ்பெக்ட்ரா புரொடக்‌ஷன்ஸ் இந்தத் தொடரை தயாரிக்கிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரஜினி, இந்திரா உள்ளிட்டத் தொடர்களை ஸ்பெக்ட்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Ponni Serial Actress Vaishnavis new serial Lakshmi Messin Vijay TV

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.