இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தன் கருப்பு திரைப்படம் குறித்து பேசியது வைரலாகியுள்ளது.
இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் வெளியீடு காணாமல் இருக்கிறது.
காரணமாக, இன்னும் இப்படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகின. கருப்பு திரைப்படத்தை ஏப்ரல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படம் குறித்து அண்மையில் ஆர்ஜே பாலாஜி பேசியபோது, “கருப்பு திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. தேர்தல் முடிந்ததும் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவருக்குமான திரைப்படமாகவே இது உருவாகியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், நேற்று (மார்ச் 8) நடைபெற்ற இந்தியா - நியூஸிலாந்து டி20 இறுதிப்போட்டியை வர்ணனை செய்துகொண்டிருந்தபோது, “ரச்சின் ரவிந்திராவே சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து ரிலீஸ் ஆகிவிட்டார். நான் எடுத்தது எப்போது ரிலீஸ் ஆகுமோ” என புலம்பலாக சொன்னார்.
இதனால், கருப்பு திரைப்படம் குறித்து ஆர். ஜே. பாலாஜிக்கே என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை என சூர்யா ரசிகர்கள் வருத்தமாக பதிவிட்டு வருகின்றனர்.
Summary
director rj balaji spokes about his directorial movie karuppu release
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி

பல நிலைகளில் மிக மோசமானது..! - ஜன நாயகன் விவகாரம் குறித்து ஆர்ஜே பாலாஜி!
ஏப்.10-ல் கருப்பு வெளியீடு? இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


