மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இதையெல்லாம் ரகசியமா வைச்சுக்கணும்! விஜய்யை விமர்சித்த சமுத்திரக்கனி!

நடிகர் விஜய் குறித்து சமுத்திரக்கனி பேசியுள்ளார்...

News image

விஜய், த்ரிஷா, சமுத்திரக்கனி

Updated On :8 மார்ச் 2026, 9:11 am

நடிகர் சமுத்திரக்கனி தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பேசியிருப்பது வைரலாகியுள்ளது.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சில நாள்களுக்கு முன் திருமண நிகழ்வொன்றில் நடிகை த்ரிஷாவுடன் கலந்துகொண்டு பலருக்கும் அதிர்ச்சியளித்தார்.

காரணம், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்ததைத் தொடர்ந்து விஜய் இப்படி செய்தது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் டெக்ஸ்லா திரைப்படத்தின் நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் பாலா உள்பட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, சமுத்திரக்கனி நடிகர் விஜய்யின் செயலைக் குறிப்பிட்டு, ”இதெல்லாம் விளையாட்டா? யாரைப் பழிவாங்க இதைச் செய்கிறார்? ஒரு பிரச்னை நடக்கும்போது நடிகையைக் கூட்டி வருகிறார். நான்கு சுவருக்குள் இதையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும். சொந்தக் கட்சிக்காரர்களே இதற்கு மேல் முட்டுக்கொடுக்க முடியாது எனப் புலம்புகிறார்கள்” என விஜய்யின் செயலை விமர்சித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Summary

actor samuthirakani talks about vijay and trisha relationship

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.