மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிக்ஸ்பேக் நல்லதல்ல: பரத்

சிக்ஸ்பேக் வைப்பது குறித்து பரத் பேச்சு....

News image

பரத்

Updated On :4 மார்ச் 2026, 12:28 pm

நடிகர் பரத் சிக்ஸ்பேக் வைப்பது நல்லதல்ல எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நம்பிக்கையான நடிகராக வலம்வந்தவர் பரத். காதல், முனியாண்டி, சேவல், 555 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து நல்ல நடிகர் என்கிற பெயரைப் பெற்றிருந்தார்.

ஆனால், தோல்விப்படங்களால் கடந்த சில ஆண்டுகளாகத் தன் பழைய மார்க்கெட்டை இழந்து நல்ல கதைகளுக்காகக் காத்திருக்கிறார்.

சாதாரண உடலமைப்புடன் இருந்த பரத், 555 திரைப்படத்திற்காக சிக்ஸ்பேக் வைத்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன்பின், சில ஆண்டுகள் கட்டுமஸ்தான உடலமைப்பைப் பராமரித்தார். தற்போதும், உடற்பயிற்சிகள் மூலம் நல்ல தோற்றத்தில் உள்ளார். ஆனாலும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிக்ஸ்பேக் ஆரோக்கியமானதல்ல என்பார்.

இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பரத், “இந்த சிக்ஸ்பேக் எல்லாம் உடலுக்கு நல்லதல்ல. அதற்கு, வாழ்க்கை முறை மாற்றத்துடன் கூடிய அர்ப்பணிப்பான உழைப்பு தேவை. இன்றைய இளைஞர்கள் ஆசைப்பட்டால் ஒருமுறை மட்டும் சிக்ஸ்பேக் வைத்துவிட்டு, அதனை விட்டுவிடுங்கள். அதையே தக்கவைப்பது உடலுக்கு பாதிப்பைக் கொடுக்கும்.

நான் 555 திரைப்படத்திற்காக அந்த உடலமைப்பைத் தக்க வைக்க ஒன்றரை ஆண்டு வெறும் சிக்கன், முட்டை, பிஸ்கட், காய்ந்த திராட்சை ஆகியவையை மட்டுமே உண்டு அதனைத் தக்கவைத்தேன். உடலைக் கடுமையாக வருத்தி வாழ்க்கை முறையை மாற்றுவது ஆரோக்கியமானதல்ல.” என அறிவுரை கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.