துபையில் நடக்கும் போர் தாக்குதல் குறித்து அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து உலகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, வளைகுடா நாடுகள் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்பதால் பல விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
முக்கியமாக, ஈரான் ராணுவம் துபையிலுள்ள அமெரிக்க ஆதரவு நிறுவனங்களைத் தாக்கி வருகிறது. அதேநேரம், ஐக்கிய அமீரகம் ஈரானின் தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் தாக்குதல் ஏவுகணைகளை வானிலேயே அழித்தும் வருகின்றன.
இதற்கிடையே, துபையிலுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லியும் விரைவில் அவர்களை தாயகம் அழைத்தும் வரும் முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், துபையில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் குமார் அங்கு சில மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
துபையில் போர் பதற்றம் காரணமாக, அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கவலையடைந்த நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “நடிகர் அஜித்குமார் பாதுகாப்பான இடத்தில் நலமாக உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
actor ajith kumar safe and secure in dubai said by his manager suresh chandra
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

விஜய்யை விமர்சித்து படமா? டிஎன் 2026 இயக்குநர் விளக்கம்!

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!

நீளிரா டிரெய்லர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


