ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நடிகர் அஜித்தின் ஏகே - 64... யார்தான் தயாரிப்பாளர்?

நடிகர் அஜித் குமாரின் புதிய திரைப்படம் குறித்து...

actor ajithkumar

நடிகர் அஜித் குமார்

Published On :30 ஜூன் 2026, 3:55 pm IST

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முதலில் இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. பின், மைத்ரி மூவிஸ் தயாரிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து, பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான அனில் சுங்கரா, ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்கிற பெயரில் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும், நடிகர் அஜித் குமாரும் இணைந்து தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காரணம், அஜித்துக்கு சம்பளம் கொடுத்து படப்பிடிப்பு பட்ஜெட்டையும் ஒதுக்க தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகிறதாம். இதனால், அஜித் தயாரிப்பில் இறங்கியதாக கூறப்பட்டது.

ஆனால், குட் பேட் அக்லி வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஏகே - 64 படத்தின் அறிவிப்பு வெளியாகாமல் இருப்பதால் உண்மையில் யார்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்? என்கிற கேள்விகளும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. குட் பேட் அக்லி போன்ற நல்ல வெற்றிப் படத்தைக் கொடுத்தும் ஏன் இன்னும் அடுத்த அறிவிப்பு வரவில்லை என்றும் அஜித் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

The question of who the producer of actor Ajith Kumar's 64th film is has arisen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.