தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இயக்குநர் விக்ரமன் என்னை விரட்டினாரா? மகேந்திரன் விளக்கம்!

நடிகர் மகேந்திரன் சூர்யவம்சம் நிகழ்வு குறித்து பேசியுள்ளார்...

News image

நடிகர் மகேந்திரன்

Updated On :17 ஜூன் 2026, 1:20 pm IST

நடிகர் மகேந்திரன் தன்னைக் குறித்து தவறுதலான தகவல் பரவுவதாகக் கூறியுள்ளார்.

சென்னையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது குறித்த கேள்விக்கு, “இவ்வளவு நாள் மின்சாரத்துடன் ஜாலியாக இருந்தவர்கள், ஒரு ஆறு மாதம் இல்லாமல் இருக்க முடியாதா? மின்சாரம் இல்லையென்றால் என் வீட்டிலிருந்துகூட மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் சோலார் சிஸ்டம் வழியாக மின்சாரத்தைப் பயன்படுத்தலாமே? அரசை ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமென கேட்டுக்கொண்டே இருப்பதா? அவரைக் (முதல்வர் விஜய்) கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? கேள்வி கேட்டே ஆக வேண்டும் என இருக்கிறார்கள்.” என்றார்.

தொடர்ந்து, இதனால் மகேந்திரனைப் பலரும் கடுமையாகத் தாக்கி எழுதி வந்ததுடன் பணக்காரர்களின் புத்தி இதுதான், ஏழை மக்களைக் கண்ட ஏளனமாகத்தான் பேசுவார்கள் என சமூக வலைதளங்களில் மோசமான வசைகளாலும் மகேந்திரன் தாக்கப்பட்டார்.

மக்களின் மனநிலையை உணர்ந்த மகேந்திரன் தற்போது விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஏளனம் செய்ய அப்படி பேசவில்லை. இன்று நான் ஒருவேளை உணவு சாப்பிடுகிறேன் என்றால் அதற்கு இந்த மக்கள்தான் காரணம். அவர்களை அவமதிப்பேனா? நான் பேசியது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.

மேலும், அந்த விடியோவில், “இயக்குநர் விக்ரமன் இயக்கிய சூர்ய வம்சம் திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தமாகி பின் திமிராக பேசியதால் அதிலிருந்து நீக்கப்பட்டேன் என நடிகர் ஒருவர் நேர்காணலில் சொன்னதைப் பரப்பி வருகின்றனர். உண்மையில், அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை. நான் அந்த நடிகரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பே இதைப்பற்றி கேட்டேன். அதற்கு அவர், சும்மா ஜாலியாக சொன்னேன் தம்பி என்றார். இதுதான் உண்மை. அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Mahendran has stated that incorrect information about him is being circulated.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.