வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஓடிடியில் வெளியாகும் ஷேன் நிகமின் கிரைம் திரில்லர் திரைப்படம்!

ஷேன் நிகமின் ட்ரிடம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image

ட்ரிடம் படத்தில் ஷேம் நிகம் - படம்: எக்ஸ்

Updated On :11 ஜூன் 2026, 3:49 pm IST

ஷேன் நிகமின் ட்ரிடம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க், பல்டி உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம். தமிழில் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருந்தார்.

ஜெமோன் ஜான், லின்டோ தேவசிய இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார்கள்.

ஜீத்து ஜோசப்பின் உதவி இயக்குநர் மார்டின் ஜோசப் இயக்கியுள்ள ட்ரிடம் படத்தில் காவல் துறை அதிகாரியாக ஷேன் நிகம் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மே.8ஆம் தேதி வெளியானது.

இந்தப் படம் விறுவிறுப்பான கிளைமாக்ஸை கொண்டிருந்தாலும், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

இ4 என்டர்டெயின்மென்ட் தயாரிக்க, ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை வழங்கியிருந்தார். இந்தப் படத்தில் சானியா ஃபாதிமா, சோபி திலகன், கிருஷ்ண பிரபா, கோட்டையம் ரமேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

மலைப்பிரதேசத்தில் தனது முதல் பணியைத் தொடங்கும் காவல் அதிகாரியான ஷேன் நிகம், சிக்கலான சூழலில் மாட்டிக்கொள்கிறார். அந்தச் சம்பவங்கள் குறித்த உண்மையை எப்படி கண்டறிகிறார் என்பதை மையப்படுத்தி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ட்ரிடம் திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் நாளை(ஜூன் 12) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Summary

The OTT release date for Shane Nigam film Tridram has been announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.