நடிகை சுகன்யா தொடர்ந்த வழக்கில் 30 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் சுகன்யா. பரதநாட்டிய கலைஞரான இவர், இயக்குநர் பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி விரைவிலேயே தனக்கான இடத்தைப் பிடித்தார்.
முக்கியமாக, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சின்னக்கவுண்டர், நடிகர் சத்யராஜுடன் திருமதி பழனிச்சாமி, நடிகர் கமல் ஹாசனுடன் மகாநதி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியாகி சுகன்யாவுக்கு திறமையான நடிகை என்கிற பெயரையும் பெற்றுத்தந்தது. இந்தியன் திரைப்படத்தில் நடித்தற்காக விருதுகளும் பெரிய பாராட்டுகளும் கிடைத்தன.
தமிழ் மட்டுமல்லாது பிற தென்னிந்திய மொழிகளிலும் நடித்து அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் மாறினார். அப்போது, 1996 ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பன் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை அளித்தபோது, நடிகை சுகன்யாவுக்கும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மகனுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் கூறினார்.
இதனை அந்த நிறுவனம் நீக்காமல் அப்படியே ஒளிபரப்பு செய்தனர். அதிர்ச்சியடைந்த சுகன்யா, இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதுடன் சினிமா வாய்ப்புகளும் பறிபோனதாகக் குறிப்பிட்டு அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தனக்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தார். கடந்த 30 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பில், நடிகை சுகன்யாவுக்கு அந்த நிறுவனம் ரூ. 10 லட்சத்து ஐநூறை (ரூ.10,00,500) நஷ்டஈடாக வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்ந்த பின்பும் நடிகை சுகன்யா, அந்தத் நிறுவனம் வெளியிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
A verdict has been delivered after 30 years in the case filed by actress Sukanya.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வழக்கு: நடிகை சுகன்யாவுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சிறையில் உரிமைகள் மறுப்பு!

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள்: நல உதவிகள் வழங்க ஏற்பாடு

நாளை கருணாநிதி பிறந்த நாள் - திமுகவினா் நலத்திட்ட உதவி வழங்க வேண்டும்: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




