எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சன் ஆஃப் தஞ்சை: முதல்முறை தமிழில் உருவான விடியோ கேம்!

சோழர் கால தமிழ் நிலத்தை மையப்படுத்தி புதிய விடியோ கேம் உருவாக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

முன்னோட்ட விடியோவிலிருந்து... - யூடியூப் / PlayStation

Updated On :8 ஜூன் 2026, 9:57 pm IST

முழுக்க தமிழ் நிலத்தை மையப்படுத்தி புதிய விடியோ கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

சன் ஆஃப் தஞ்சை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விடியோ கேமுக்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை பாடலாசிரியரும் மென்பொறியாளருமான மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

சென்னையை மையமாக கொண்ட ஸ்டூடியோவான அயலெட் ஸ்டூடியோஸால் உருவாக்கப்பட்ட சன் ஆஃப் தஞ்சை விளையாட்டு எக்ஸ் பாக்ஸ் எக்ஸ், பிஎஸ் 5 ஆகிய தளங்களில் வெளியாகவுள்ளது.

அரண்மனையில் வாழ்ந்துவரும் சோழ இளவரசன் விண்ணேந்திரன் பற்றிய கதையாக இந்த விடியோ கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தந்தை மரணப் படுக்கையில் இருக்க, எதிரிகள் நெருங்கி வர, அரசு வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கிறது. இதனால் சாதாரண மனிதனாக சமூகத்தில் மகனை களமிறக்கிவிடுகிறார் மன்னர். வணிகர்கள், உழவர்களோடு இருந்து நாட்டை ஆளும் தகுதி வளர்த்துகொண்டு இளவரசன் அரியணை ஏறி எதிர்களை வீழ்த்துவதே இந்த கேமின் களமாக அமைக்கப்பட்டுள்ளது.

சோழர் காலத்திய தஞ்சாவூர் நிலம், விவசாயம், காடுகளை காட்சிப்படுத்தும் வகையில் கிராஃபிக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில வசனங்களுடன் இந்த கேம் வெளியாகவுள்ளது. இதனால் சர்வதேச அளவில் தமிழ் கேம் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள இந்த கேமின் முன்னோட்ட விடியோ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

Summary

Son of Thanjai by madhan karky The first video game created in Tamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.