ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒரே சீரியலில் சொந்தமாக கார் வாங்கிய இளம் நடிகை!

சின்ன திரை நடிகை பரமேஸ்வரி ரெட்டி இளம் வயதில் சொந்தமாக சொகுசு கார் வாங்கியுள்ளது குறித்து...

parameswari reddy

புதிய காருடன் பரமேஸ்வரி ரெட்டி... - இன்ஸ்டாகிராம்

Published On :30 ஜூலை 2026, 5:13 pm IST

சின்ன திரை நடிகை பரமேஸ்வரி ரெட்டி இளம் வயதில் சொந்தமாக சொகுசுக் கார் வாங்கியுள்ளார். தமிழில் ஒரு தொடரில் மட்டுமே நடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து தனிப் பாடல்களில் நடனமாடியதன் மூலம் சொந்தமாக கார் வாங்கியுள்ளார்.

சமீபத்தில் தனது கனவு இல்லத்தை கட்டி முடித்து, தாய் தந்தைக்கு அதனை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். புதுமனை புகுவிழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டன.

சொந்த வீடு கட்டி முடித்த சில நாள்களில் சொந்தமாகக் கார் வாங்கியுள்ள பரமேஸ்வரிக்கு சின்ன திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையில் மனசெல்லாம் தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் வெண்பா, பரமேஸ்வரி ரெட்டி, தீபக், ஜெய்பாலா உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வந்தனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குறுகிய காலமே ஒளிபரப்பாகியிருந்தாலும், டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முதன்மைத் தொடர்களில் ஒன்றாக மனசெல்லாம் இருந்தது.

மனசெல்லாம் தொடரில்...

மனசெல்லாம் தொடரில்...

இத்தொடரில் தீபக் - பரமேஸ்வரி தம்பதிக்கு இடையிலான காட்சிகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இவர்களின் காதல் காட்சிக்கு இணையத்தில் ரசிகர்கள் ஏராளம்.

தெலங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், இத்தொடருக்குப் பிறகு தமிழில் வேறு எந்தவொரு தொடரில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு மொழியில் தனிப் பாடல்களில் தோன்றினார்.

தெலுங்கு சுயாதீனப் பாடலில்...

தெலுங்கு சுயாதீனப் பாடலில்...

இதற்கு முன்பு தெலுங்கு மொழியில் ஒளிபரபான நம்பர் ஒன் கோடாலு என்ற தொடரில் துணைப் பாத்திரத்தில் பரமேஸ்வரி நடித்திருந்தார்.

புதுமனைப் புகுவிழாவில்...

புதுமனைப் புகுவிழாவில்...

ஒரு தொடரில் மட்டுமே நடித்திருந்தாலும் சொந்தமாக வீடு கட்டி, தற்போது கார் வாங்கும் அளவுக்கு பரமேஸ்வரி உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Serial actress Parameswari reddy buys her own car thanks to a single serial

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.