ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தாயானார் பிகில் திரைப்பட நடிகை ரெபா மோனிகா!

பிரபல நடிகை ரெபா மோனிகா தாயானார்...

reba monica john

நடிகை ரெபா மோனிகா

Published On :29 ஜூலை 2026, 3:15 pm IST

நடிகை ரெபா மோனிகா பெண் குழந்தைக்குத் தாயாகி உள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளான கால்பந்து வீராங்கனையாக நடித்தவர் பிரபல மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான். தொடர்ந்து, தமிழில் எஃப்ஐஆர் படத்தில் நடித்தார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு கவனம் ஈர்த்தும் வருவார். இதற்கிடையே, கடந்த 2022 ஆம் ஆண்டு தன் நீண்ட நாள் காதலரான ஜோமான் ஜோசஃப் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

பின், சில மாதங்களுக்கு தான் தாயாக உள்ளதாக அறிவித்தார். அதனால், திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகினார். இந்த நிலையியில், தனக்கு கடந்த ஜூலை 22 ஆம் தேதி மகள் பிறந்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், மகளுக்கு கியாரா ஜோசஃப் எனப் பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மலையாளம், தமிழ் சினிமா ரசிகர்கள் மோனிகாவுக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

Actress Reba Monica has announced that she has given birth to a baby girl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.