ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கவலைப்படாதீர்கள்.. நடிகை த்ரிஷா சொல்லும் அட்வைஸ்! யாருக்கு?

கவலையேபடாமல் வாழ்வதற்கு நடிகை த்ரிஷா ஒரு அறிவுரை வழங்கியிருக்கிறார். அது பற்றி..

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா - insta

Published On :29 ஜூலை 2026, 1:23 pm IST

ஒரு மனிதன், நடப்பது, நடக்கப்போவது, நடக்கவே வாய்ப்பில்லாதது என பலவற்றையும் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நடிகை த்ரிஷா ஒரு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

கடந்த வாரம், நடிகை த்ரிஷா, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுத் திரும்பியிருந்தார்.

அங்கு எடுத்தப் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை த்ரிஷா, ஒற்றை வாக்கியம் ஒன்றை உதிர்த்துள்ளார். உண்மையில் பலருக்கும் இன்றைய நாளில் இது தேவையான அட்வைஸ்தான்.

அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், "எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு தேர்வு. அதைத் தேர்ந்தெடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

உண்மையில் எவ்வளவு ஆழமான அறிவுரை. பலரும் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அதிகம் கவலைப்பட்டுக் கொண்டு, அவர்கள் இப்படி பேசிவிட்டார்களே, சொல்லிவிட்டார்களே என்று கவலைப்பட்டுக் கொண்டு மனதையும் உடலையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனால், கவலைப்படுவதால் ஒன்றுமே மாறாது என்று இத்தனை ஆண்டுகாலமாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே தெரியும். இருந்தபோதும், அதனை நிறுத்துவதில்லை.

கேட்டால், கவலைப்பட இத்தனை இருக்கிறது என்று ஒரு பெரிய பட்டியலைத்தான் போடுவார்கள். அதனைத் தவிர்த்து கவலைப்பட எத்தனையோ இருந்த போதும், எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேலையை மட்டும் செய்து கொண்டிருங்கள். வாழ்க்கை இனிமையாகும்.

அதனைத்தான் நடிகை த்ரிஷாவும் சொல்லியிருக்கிறார்கள். யதார்த்தமான அறிவுரை என்பதால் எல்லோருக்குமே பயனிக்கும் என்பதால் இங்கே பகிர்ந்திருக்கிறோம். பின்பற்றலாமே.

Summary

Actress Trisha has offered some advice on how to live a worry-free life. Here are the details...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.