ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மகன் துல்கர் சல்மான் பிறந்த நாளுக்கு செல்லப் பெயருடன் வாழ்த்திய மம்மூட்டி!

நடிகர் துல்கர் சல்மான் பிறந்த நாளுக்கு அவரது தந்தை மம்மூட்டியின் வாழ்த்து குறித்து...

Dulquer Salmaan with Mammootty.

மம்மூட்டி உடன் துல்கர் சல்மான். - படம்: இன்ஸ்டா / துல்கர் சல்மான்.

Published On :28 ஜூலை 2026, 7:05 pm IST

நடிகர் துல்கர் சல்மான் பிறந்த நாளுக்கு அவரது தந்தையும் நடிகருமான மம்மூட்டியின் வாழ்த்து சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

நடிகர் மம்மூட்டி - சுல்ஃபத் குட்டிக்கும் மகனாக துல்கர் சல்மான் 1983ல் கொச்சியில் பிறந்தார். இவர் தற்போது முன்னணி நடிகராக தென்னிந்தியாவில் முன்னேறியுள்ளார்.

நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் துல்கர் சல்மான் அசத்தி வருகிறார். அவரது தயாரிப்பில் உருவான லோகா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது.

துல்கர் சல்மான் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள இரண்டு படங்களில் இருந்தும் பாடல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்ரீ ஸ்ரீ என்ற படத்தில் இருந்து வானே வானே என்ற பாடல் வெளியானது.

இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) ஆகிய படங்களில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இதன் முதல் பாடலான மிட்டாய் மழை பாடல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், துல்கரின் தந்தையும் நடிகருமான மம்மூட்டி தனது சமூக வலைதள பக்கத்தில், “பிறந்த நாள் வாழ்த்துகள் சாலு” எனக் குறிப்பிட்டு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பெயரை வைத்தது அவரது அம்மா எனக் கூறப்படுகிறது.

சாலு என்ற செல்லப் பெயருக்கு என்ன பொருள் எனத் தெரியவில்லை. சமூக வலைதளத்தில் பலரும் இந்தப் பெயருக்கான காரணத்தைக் கேட்டு வருகிறார்கள்.

Summary

Happy Birthday Chaalu, Mammootty wishes his son Dulquer Salmaan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.