ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வருடன் 4 அமைச்சர்களும் இணைந்து நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் ஜன நாயகன்!

ஜன நாயகன் படத்தில் முதல்வர் விஜய்யுடன் இணைந்து நான்கு அமைச்சர்களும் நடித்திருப்பது பற்றி...

Jana nayagan

முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் அருண்ராஜ், விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீநாத், என். ஆனந்த். - X

Published On :24 ஜூலை 2026, 3:50 pm IST

தமிழ்நாட்டின் முதல்வரும், நான்கு அமைச்சர்களும் இணைந்து நடித்திருக்கும் முதல் திரைப்படமாக ஜன நாயகம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இயக்குர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான 'ஜன நாயகன்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே, கடந்த ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கைச் சான்று பிரச்னைகளால் படம் வெளிவர முடியாமல் போனது.

பல்வேறு தடைகளைக் கடந்து ஜன நாயகனுக்கு 'ஏ' சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை உலகளவில் 8,000 திரைகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற நிலையில், ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

இதையடுத்து படத்தின் டைட்டில் கார்டில் ’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்’ நடிப்பில் எனத் திரையில் வரும்போது, அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

கடைசியாக எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்று இரண்டு மாதங்களில் அவர் நடித்த 'மீனவ நண்பன்' திரைப்படமும், 6 மாதங்களில் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படமும் வெளியானது. தற்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரின் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மேலும், ஜன நாயகன் திரைப்படத்தில் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள என். ஆனந்த், அருண் ராஜ், ஸ்ரீநாத், விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோரும் சில காட்சிகளில் நடித்துள்ளனர்.

திரைத்துறை வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்வரும் நான்கு அமைச்சர்களும் இணைந்து நடித்திருக்கும் ஒரே திரைப்படம் ஜன நாயகன்தான்.

அமைச்சர் ஸ்ரீநாத், சந்தோஷ் சுப்பிரமணியம், மாசிலாமணி, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் ஏற்கெனவே அறிமுகமானவர்.

இதேபோல், விஜய்யின் தீவிர ரசிகரான விஜய் தமிழன் பார்த்திபன், ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவையில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

மேலும், விஜய் நடிப்பில் வெளியான கத்தி, ஜில்லா, கோட் ஆகிய திரைப்படங்களில் சிறிய போலீஸ் கதாபாத்திரத்திலும் விஜய் தமிழன் பார்த்திபன் நடித்திருக்கிறார்.

இதனிடையே, ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் தேர்தலுக்கு முன்னதாகவே நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The first Tamil film in which the Chief Minister and four ministers acted together!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.