ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமம் இத்தனை கோடிகளா?

ஜெயிலர் - 2 திரைப்படம் குறித்து...

rajinikanth

ஜெயிலர் ரஜினிகாந்த்

Published On :21 ஜூலை 2026, 5:50 pm IST

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமத் தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் பாகத்தின் தோற்றத்திலேயே நடிக்கிறார். நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகும் படம் என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசைகளின் மீது பெரிய ஆவல் எழுந்துள்ளது. இத்திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமைக்கான விலையை ரூ. 60 கோடியாகத் தயாரிப்பு நிறுவனம் நிர்ணயித்துள்ளதாம். ரஜினியின் கூலி திரைப்படம் ஒட்டுமொத்தமாக தெலுங்கில் ரூ. 40 கோடி வரை மட்டுமே வசூலித்தது. அதுவும் அப்படத்தில் நடிகர் நாகர்ஜூனா இருந்தார். ஆனால், ஜெயிலர் - 2 திரைப்படத்திற்குக் கூடுதல் தொகையை வைத்துள்ளது விநியோகிஸ்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

Details regarding the Telugu release rights value for the film Jailer 2, starring actor Rajinikanth, have been revealed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.