ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அதிர்ச்சி தோற்றம்! நடிகர் சல்மான் கானுக்கு என்ன ஆனது?

நடிகர் சல்மானின் தோற்றம் அவரது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

actor salmaan khan

நடிகர் சல்மான் கான்.

Published On :20 ஜூலை 2026, 12:30 pm IST

நடிகர் சல்மான் கானின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சல்மான் கான் பல ஆண்டுகளாக பாலிவுட்டின் நட்சத்திர நடிகராக, ஹிந்தி சினிமா கொண்டாடும் மூன்று கான்களான ஷாருக்கான், ஆமீர்கானுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். ஆனால், தனித்துவமான வாழ்க்கைக் கொண்டாட்டங்கள், சர்ச்சையான கடந்த கால காதல்கள் என சல்மான் மட்டும் சர்ச்சையும் பரபரப்பும் கொண்ட நாயகனாகவே இருக்கிறார்.

மானை வேட்டையாடிய வழக்கில் சிக்கியது, வீட்டில் துப்பாக்கி வைத்திருந்தது, மானை வேட்டையாடிய விவகாரத்தால் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னாயிடமிருந்து கொலை மிரட்டல்களை எதிர்கொள்வது என எப்போதும் பாதுகாப்புடனும் உள்ளார்.

இறுதியாக, சல்மான் நடிப்பில் வெளியான சிக்கந்தர் தோல்விப்படமானது. மேலும், பல திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். தற்போது, இயக்குநர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் நடிகை நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நடிகர் சல்மான் கானின் உடல் மெலிந்த தோற்றம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதானாலும் கட்டுமஸ்தாக பல நடிகர்கள் இருக்கும் போது, உடற்பயிற்சியில் கவனம் கொண்ட சல்மான், இப்படி வயதான தோற்றத்தில் இருப்பது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கந்தர் வரை நன்றாக இருந்தவர் திடீரென உடல் எடையை இழந்ததற்கு, நலமற்ற உடல் காரணமாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சிலர், சல்மானுக்கு 60 வயதாகிவிட்டது. எப்போதும் கட்டுமஸ்தமான தோற்றத்திலேயே இருக்க முடியுமா? அவருக்கும் வயதாகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

A video of actor Salman Khan is going viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.