ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அனுபமா பரமேஸ்வரன் - துருவ் பிரேக் அப்? இன்ஸ்டா பதிவால் எகிறும் பரபரப்பு!

அனுபமா பரமேஸ்வரன் - துருவ் பிரேக் அப் ஆகியிருக்கலாம் என இன்ஸ்டா பதிவால் சந்தேகம்

அனுபமா பரமேஸ்வரன்

அனுபமா பரமேஸ்வரன் - instagram

Published On :20 ஜூலை 2026, 10:12 am IST

நடிகை அனுபமா பரமேஸ்வரன் - நடிகர் துருவ் விக்ரம் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டா பதிவுகள் அவர்களுக்கு இடையே பிரேக் ஆப் ஆகியிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஏராளமான புகைப்படங்களைப் பகிர்ந்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பைசன் படத்தில் நடித்தபோது நடிகர் துருவ் விக்ரம் - அனுபமா இடையே நட்பு துளிர்க்கக் காரணமாக இருந்து, அது நாளடைவில் காதலாக மலர்ந்ததாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுபற்றி இருவருமே இதுவரை வாய் திறக்கவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை.

நீண்ட காலமாக நடிகர் துருவ் விக்ரமுடன் இணைத்துப் பேசப்பட்டு வந்த நிலையில்தான், நடிகை அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியிருக்கிறது.

அந்த பதிவுடன், ஒரு ரகசிய குறிப்பையும் அவர் வெளியிட்டிருந்தது. துருவ் - அனுபமா பிரிந்து விட்டார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அந்த பதிவில் அவர் காதல் பற்றியோ, பிரிவு பற்றியோ எதையும் சொல்லவில்லை. (பிறகு எப்படிக் கண்டுபிடித்தார்கள்?)

அவர் சொல்லியிருப்பது இதுதான், "அடடா!! இத்தனை புகைப்படங்களை ஒரே நேரத்தில் பகிர்ந்ததற்கு மன்னிக்கவும். ஒப்புதல்கள், பாடல்களைத் தேர்ந்தெடுப்பது அல்லது வேறொருவரின் குறிப்புக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்றால், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக மாறுகிறது என்பதை இப்போதுதான் உணர்கிறேன்," என்ற வாசகத்துடன் அவர் தன்னுடைய பல புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

இது போதாதா? அவரது ரசிகர்களுக்கு. இதுவரை அனுபமா தன்னுடைய புகைப்படங்களைப் பகிர யாரோ ஒருவருடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டிருந்தார். இப்போது அது தேவையில்லாமல் ஆகியிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

துருவ் - அனுபமா பிரிந்ததற்கான ஒரு ரகசிய குறிப்பாக இருக்கலாம் என்றுதான் அவரது ரசிகர்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள்.

இதனை உறுதி செய்யும் வகையில் அனுபமா இன்ஸ்டாகிராமில் துருவ் விக்ரமைப் பின்தொடர்வதை (following) நிறுத்தியிருப்பதையும் ரசிகர்கள் கவனிக்கத் தவறவில்லை. ஏற்கனவே சந்தேகம் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று ரசிகர்கள் பேசி வந்த நிலையில், இது மேலும் அதனை ஊர்ஜிதப்படுத்துவதாக இருப்பதாகவே கருத்திடுகிறார்கள்.

பைசன் படத்தில் அனுபமாவும் துருவ்வும் இணைந்து நடித்த போது இவர்களுக்குள் காதல் பற்றிக் கொண்டதாக வதந்திகள் வெளியாகின. ஸ்பாடிஃபை பிளேலிஸ்ட் சமூக வலைத்தளத்தில் கசிந்தது, பொது நிகழ்ச்சிகளில் அவர்கள் ஒன்றாக பங்கேற்றது போன்றவை அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்தது. இருவரும் அதனை மறுக்கவும் இல்லை ஆம் என ஒப்புக் கொள்ளவும் இல்லை. சினிமா துறையில் இப்படி ஒப்புக் கொள்ளும் காதல் ஜோடிகள் அபூர்வம்தான்.

இந்த நிலையில்தான் அனுபமாவின் பதிவு அவர்கள் பிரிந்து விட்டதை மறைமுகமாக எடுத்துரைப்பதாகக் கருதுகிறார்கள். ஆனால், இது அவரது தனிப்பட்ட சுதந்திர உணர்வை வெளிப்படுத்துவதாகவும் இருக்கலாம் என அனுபமாவின் நலம் விரும்பும் ரசிகர்கள் கூறுவதையும் கவனத்தில் கொள்ளலாம்.

Summary

Anupama Parameswaran - Dhruv breakup? Instagram post sparks a buzz!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.