ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சோனம் வாங்சுக்கின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்! நடிகர் சத்யராஜ்

சோனம் வாங்சுக்கின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என நடிகர் சத்யராஜ் பேசியுள்ளது பற்றி...

Actor Sathyaraj

நடிகர் சத்யராஜ் - படம் - விடியோ க்ளிப்

Published On :18 ஜூலை 2026, 6:16 pm IST

சோனம் வாங்சுக்கின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் எனப் பேசி நடிகர் சத்யராஜ் விடியோ வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து, கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ளவில்லை எனவும், அங்கிருந்தபடி போராட்டத்தை அவர் தொடர்வதாகவும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தற்போது அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சோனம் வாங்சுக் குறித்து நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள விடியோவில் பேசியதாவது:

”நீட் தேர்வு சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக தில்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்கின் நியாயமான கோரிக்கைகளைப் புரிந்துகொண்டு ஒன்றிய அரசு ஆவண செய்யுமாறு இந்திய ஒன்றியத்தின் குடிமகன் என்ற முறையில் கோரிக்கை வைக்கிறேன். சோனம் வாங்சுக்கின் போராட்டம் வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன்” என்று அந்த விடியோவில் சத்ய்ராஜ் தெரிவித்துள்ளார்.

சோனம் வாங்சுக்கின் தொடர்ச்சியாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கேவும் உண்ணாவிரதத்தில் இருக்கப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor Sathyaraj has released a video wishing success for Sonam Wangchuk's protest.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.