மாதவன் நடித்த ஜிடி நாயுடு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ஜி.டி.என். படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிடி நாயுடுவாக நடித்துள்ள மாதவன்
ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ஜி.டி.என். படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மாதவன் ராக்கெட்ரி படத்தின் வெற்றிக்குப் பின் சைத்தான் படத்தில் நடித்தார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது, மறைந்த ஆராய்ச்சியாளரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார். இந்தியாவின் எடிசனாக அறியப்பட்ட ஜிடி நாயுடுவின் வாழ்க்கையில் அறியப்படாத பக்கங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
ராக்கெட்ரி படத்தை தயாரித்த டிரை கலர்ஸ் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை, கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஜிடிஎன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஜி.டி.என். திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 7 அன்று பான் இந்திய மொழிகளில் வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிடிஎன்
Summary
Madhavan Starrer Gd Naidu Release Date Announcement
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







