ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நூறு சாமி படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

நூறு சாமி படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம் குறித்து...

Poster of the movie 'Nooru Saami'.

நூறு சாமி படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / விஜய் ஆண்டனி.

Published On :12 ஜூலை 2026, 1:12 pm IST

நூறு சாமி திரைப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமைகளை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து இருந்தனர். கணவனை இழந்த பெண்ணாகவும் இரண்டு மகன்களின் அம்மாவாகவும் சிறப்பான நடிப்பை ஸ்வாசிகா வழங்கியிருந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கணவனை இழந்த பெண்ணை மையப்படுத்தி உணர்வுப்பூர்வமாக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

நூறு சாமி திரைப்படம் ரூ. 16 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நூறு சாமி திரைப்படத்தின் சாட்டிலைட் (தொலைக்காட்சி) மற்றும் டிஜிட்டல் (ஓடிடி) உரிமைகளை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Summary

Zee has acquired the television and OTT rights for the movie Nooru Saami.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.