ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறுமியின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தியதால் விநாயகன் மீது வழக்குப் பதிவு!

பிரபல மலையாள நடிகர் விநாயகன் மீதான வழக்கு குறித்து...

Actor Vinayakan confirms he is a part of Rajinikanth

ஜெயிலர் படத்தில் விநாயகன். - ENS

Published On :10 ஜூலை 2026, 4:37 pm IST

பிரபல மலையாள நடிகர் விநாயகன் சிறுமியின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கம்மாட்டிப்பாடம், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களின் மூலம் மலையாளம், தமிழில் கவனம்பெற்ற நடிகராக மாறினார் விநாயகன். குடித்துவிட்டு வழக்குகளில் அடிக்கடி சிக்குவது அவரது வழக்காமன ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இந்த முறை சிறுமி புகைப்படத்தினால் வந்துள்ளதால் மிகுந்த சர்ச்சையாகியுள்ளது.

கேரள மாநில குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின் பேரில் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவேலிக்கரா காவல்துறை இந்த வழக்கினை பதிவு செய்துள்ளது.

கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற சம்பவத்துக்காக இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆழப்புழா மாவட்டத்தில் தாழக்கரா பகுதியைச் சேர்ந்தவர் மும்பையில் வேலை செய்து வருகிறார். 2025ல் விநாயகன் அமைச்சர் ஒருவரை விமர்சித்து முகநூலில் கவிதை ஒன்றை பதிவிடுகிறார். அது பலரையும் முகம்சுழிக்க வைக்கிறது.

இந்தப் பதிவை எடுத்து விநாயகனுக்கு வாட்சப் வழியாக புகார்ளித்தவர் உரையாடியிருக்கிறார். இந்த வாக்குவாதத்தை விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிடுகிறார். அதில் புகார்தாரரின் வாட்சப் டிபியில் அவரது 8 வயது மகளும் இருக்கிறார். அதில் மொபைல் எண்ணுடன் விநாயகன் பதிவிட்டதால் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்தப் பதிவினால் பலரும் அந்த நபரை தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசியுள்ளார்கள். இதனால், குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தைத் தொடர்பு கொண்டு நடிகருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினியுடன் ஜெயிலர் 2 படத்திலும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் அக்.15ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Summary

Kerala Police register case against Jailer actor Vinayakan over alleged misuse of minor girl's photo

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.