
இதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
இதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது பற்றி...

இதயம் முரளி போஸ்டர் - x
சென்னை: 'இதயம் முரளி' படத்துக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் பிரச்னையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் சுதா கொங்கரா தாக்கல் செய்த மனுவில், ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'பரசாக்தி' திரைப்படம் கடந்த ஜன. 9 -ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை இயக்கிய எனக்கு ரூ.15 கோடி ஊதியமாக வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், சம்பள பாக்கித் தொகையான ரூ. 8.39 கோடியை இதுவரை வழங்கவில்லை.
எனவே, எனது சம்பள பாக்கித் தொகையை வழங்க டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.
அதுவரை அந்த நிறுவனம் தயாரித்துள்ள 'இதயம் முரளி' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும், 'பராசக்தி' படத்தின் உரிமையை மூன்றாம் நபருக்கு வழங்க தடை விதிக்க வேண்டும். 'பராசக்தி' படத்துக்கு ஓடிடி, தொலைக்காட்சி உரிமம் வழங்கியதன் மூலம் கிடைத்த வருமானத்தின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, 'இதயம் முரளி' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும், இந்த பிரச்னையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Summary
High Court refuses to stay the release of 'Idhayam Murali'!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





