ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மிஸ்டர் மனைவி தொடர் நாயகனை கரம் பிடிக்கும் ஆர்த்தி சுபாஷ்!

ஆர்த்தி சுபாஷ் - பவன் ரவீந்திரா ஜோடிக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் தொடர்பாக...

aarthi subash

ஆர்த்தி சுபாஷ் - பவன் ரவீந்திரா ஜோடி - படம்: இன்ஸ்டாகிராம்

Published On :4 ஜூலை 2026, 12:43 pm IST

மிஸ்டர் மனைவி தொடர் நாயகன் பவன் ரவீந்திராவுக்கும் நடிகை ஆர்த்தி சுபாஷுக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

யூடியூபில் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி சுபாஷ். இதனைத் தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார்.

இத்தொடரில் மல்லிகா பாத்திரத்தில் தனக்கே உரிய நகைச்சுவை கலந்த துணிச்சலான பாணியில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார் ஆர்த்தி. இத்தொடர் முடிவுக்கு வந்ததையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் நடித்தார்.

இத்தொடரைத் தொடர்ந்து, தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடரில் பைரவி என்ற பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அவ்வபோது விடியோக்களை வெளியிட்டு வரும் ஆர்த்தி, மிஸ்டர் மனைவி தொடர் நாயகன் பவன் ரவீந்திராவை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.

பவன் ரவீந்திராவின் பிறந்த நாளையொட்டி, தன்னுடைய வாழ்த்துகளுடன் காதலையும் சூசகமாக, ரசிகர்கள் அனைவருக்கும் தெரிவித்திருந்தார்.

நடிகர் பவன் ரவீந்திரா மிஸ்டர் மனைவி தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர். இவர் தற்போது ஜீ தெலுங்கில் தீர்க்க சுமங்களி பவா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

ஆர்த்தி சுபாஷ் - பவன் ரவீந்திரா இணைக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை இருவரும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

பவன் ரவீந்திரா - ஆர்த்தி சுபாஷுக்கு சினிமா, சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

The engagement of Mr. Manaivi series lead actor Pawan Ravindra and actress Aarthi Subash took place recently.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.