நடிகர் அருள்நிதி நடித்துள்ள அருள்வான் படத்தின் முதல் பாடலான ’அல்லிப்பூவே’ என்ற பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.
வம்சம் திரைப்படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அருள்நிதி மௌன குரு, டிமாண்டி காலனி ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார். கடைசியாக இவர் நடித்த ராம்போ நேரடியாக ஓடிடியில் வெளியானது.
90 பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள அருள்வான் என்ற படத்தில் அருள்நிதி நடித்துள்ளார். இந்தப் படத்தை கணேஷ் விநாயகன் எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ரம்யா பாண்டியன், ஆரவ், பேபி கார்த்திகா, காளி வெங்கட், விடிவி கணேஷ், ஜான் விஜய் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
யுகபாரதி எழுதிய பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Arulnidhi, Aarav, Ramya Pandian Arulvaan film Allipoove Lyrical Video
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










