ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இயக்குநர் திரு இயக்கத்தில் நடிக்கும் ஷண்முக பாண்டியன்!

விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியனின் புதிய திரைப்படம் குறித்து...

actor shanmuga pandian, director thiru

நடிகர் ஷண்முக பாண்டியன், இயக்குநர் திரு

Published On :2 ஜூலை 2026, 4:48 pm IST

நடிகர் ஷண்முக பாண்டியனின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகனான ஷண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான படை தலைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த கொம்புசீவி திரைப்படமும் பெரியளவில் கவனம் பெறவில்லை. மேலும், இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஷண்முக பாண்டியன் நடிப்பார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர் திரு இயக்கத்தில் ஷண்முக பாண்டியன் நடிக்கவுள்ளதாகவும் இதனை எல். கே. சுதீஷ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் திரு நடிகர் விஷாலை வைத்து தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Information regarding actor Shanmuga Pandian's new film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.