மறக்க முடியாத பிறந்த நாள்..! அனுபமா நெகிழ்ச்சி!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த இன்ஸ்டா பதிவு குறித்து...


நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் , ”மறக்க முடியாத பிறந்த நாள்” என அனுபமா மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது முன்னணி தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடிக்கும் அனுபமா கடைசியாக தமிழில் பைசன் படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அனுபமாவின் நடிப்பிற்கு குவிந்த பாராட்டுகள் சமீபத்தில் அவருக்கு இதற்காக தனியார் விருதுகளும் கிடைத்தன.
கடந்த பிப்.18ஆம் தேதி அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஒரு விருது நிகழ்வில் துருவ் விக்ரம் மேடையிலேயே அனுபமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல அவர் வெட்கப்பட்டு சிரித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது (மிகவும் சிறந்த வழியில்). என் பிறந்த நாளுக்குக் கிடைத்த அன்பு, வாழ்த்துகள், ஆசீர்வாதங்கள் அனைத்துக்கும் நன்றி.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க நேரம் கிடைக்கவில்லை. ஆனால், உங்கள் வாழ்த்தால் நான் மிகவும் மகிழ்ந்தேன் என்பதனை தெரிந்துகொள்ளுங்கள். என்னை மிகவும் சிறப்பாக உணர வைத்ததுக்கு மிகவும் நன்றி.
இந்தப் பிறந்த நாளை நான் மறக்கவே மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...