டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திறமையும் நேர்மையும்... சிவகார்த்திகேயனை வாழ்த்திய கமல் ஹாசன்!

சிவகார்த்திகேயனுக்கு கமல் ஹாசன் வாழ்த்து...

News image
நடிகர்கள் கமல்ஹாசன் , சிவகார்த்திகேயன்
Updated On :17 பிப்ரவரி 2026, 12:50 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகி கவனம் பெற்றாலும் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்களால் நல்ல நாயகன் எனப் பெயரெடுத்தார்.

தொடர்ந்து, சில வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி கதாநாயகன் இடத்தைப் பிடித்ததுடன் ரஜினி, விஜய்க்குப் பின் குடும்பங்கள் ரசிக்கும் நாயகன் என்கிற அளவுக்கு வணிகத்திலும் முன்னேறினார்.

முக்கியமாக, அமரன் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனை வணிகத்தைக் கொடுத்தது.

இறுதியாக நடித்த பராசக்தி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தற்போது தன் 26-வது திரைப்படமான சேயோனில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் வேளையில் நடிகர் கமல் ஹாசன், “என் அன்புத் தம்பி சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் திறமையும் நேர்மையும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.” என வாழ்த்தியுள்ளார். சேயோன் திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.