டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிறந்தநாளில் ஒன்றுகூடிய இரு முன்னணி தொடர்களின் நாயகிகள்!

சிறகடிக்க ஆசை தொடரின் நாயகி நடிகை கோமதி பிரியாவுடன் மோதலும் காதலும் நடிகை அஸ்வதி..

News image
அஸ்வதியும் கோமதி பிரியாவும்- படம் - இன்ஸ்டாகிராம்
Updated On :10 பிப்ரவரி 2026, 11:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிறகடிக்க ஆசை தொடரின் நாயகி நடிகை கோமதி பிரியாவுக்கு மோதலும் காதலும் நடிகை அஸ்வதி பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இருவருமே கேரளத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமிழில் சின்ன திரை தொடர்களில் நடித்து பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடரில் நடிகை கோமதி பிரியா தமிழில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் புதிய தொடரில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதாவது, தமிழில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரின் மலையாள மறுஉருவாக்கத்தில் நாயகியாக கங்கா என்ற பாத்திரத்தி நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி தெலுங்கில் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.

இதன்மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளின் சின்ன திரையிலும் நடித்துவரும் நடிகை என்ற பெருமையை கோமதி பிரியா பெற்றுள்ளார்.

கோமதி பிரியா

கோமதி பிரியா

நிற்பதற்கே நேரமில்லாமல் பயணித்துக்கொண்டிருந்தாலும், கிடைக்கும் இடைவேளைகளில் பயணங்கள் செல்ல இவர் தவறுவதில்லை.

இதேபோன்று நடிகை அஸ்வதியும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மோதலும் காதலும் தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அஸ்வதி

அஸ்வதி

இதனைத் தொடர்ந்து ஹார்ட் பீட் -2 இணையத் தொடரில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். இவரும் மலையாளத்தில் மற்றொரு தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை கோமதி பிரியாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார் நடிகை அஸ்வதி.

பிறந்தநாள் விழாவில்...

பிறந்தநாள் விழாவில்...

சிலருடன் ஏற்பட்டுள்ள நெருக்கம் போன்ற சிறந்ததொரு பரிசு இந்த உலகத்தில் வேறு எதுவும் இருக்க முடியாது என, கோமதி பிரியா உடனான நட்பு குறித்து நடிகை அஸ்வதி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாளில் கேக் வெட்டி அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட கோமதி பிரியா பதிவிட்டுள்ளதாவது:

''வார்த்தைகளை விட சில செயல்கள் உரக்கப் பேசும். நான் சற்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி இன்று கிடைத்துள்ளது. அடிக்கடி பேசிக்கொள்ளாவிட்டாலும், சிலருடனான உறவு மரியாதையும் அன்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளையும் கொண்டதாக இருக்கும். என் வாழ்வில் உங்களைப் பெற்றதற்காக நான் ஆசிர்வதிக்கப்பட்டதாகக் கருதுகிறேன்'' என அஸ்வதி உடனான நட்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

summary

Serial Actress Gomathi priya Bday celebrated by Actress Ashwathy agnihothri

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.