இயக்குநர் மாரி செல்வராஜ் மை லார்ட் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், சைத்ரா ஆச்சார் நடிப்பில் உருவான மை லார்ட் திரைப்படம் பிப். 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதன் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாலா, மாரி செல்வராஜ், வெங்கடேஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “மை லார்ட் திரைப்படத்தைப் பார்த்து முடித்ததும் என் உதவி இயக்குநர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தேன். இப்படத்தின் முடிவு என்னை நிறைய யோசிக்க வைத்ததுடன் தர்க்கப்பூர்வமாக அசைத்துப் பார்த்தது. கிளைமேக்ஸ் சரியா? இல்லை, தவறா? என இரவு முழுவதும் பேசினோம். இப்படி நினைத்துப் பாருங்கள் என ஒரு விஷயத்தைச் சொன்னேன்.
நடிகர் சசிகுமாரால் மட்டும்தான் இப்படியான படங்களில் நடிக்க முடியும். நல்ல கதையை எழுதுபவர்களிடம் எல்லாம் சசிகுமார் இருக்கிறார். தைரியமாக எழுதுங்கள் என்றுதான் சொல்வேன். அப்படியான ஓர் ஆள். ராஜுமுருகன் இப்படத்தில் வெற்றி பெற்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வித் லவ் திரைப்படத்தைப் பாராட்டிய விஜய் தேவரகொண்டா!

”அழுத்தமான கதையால் வென்றிருக்கிறார்!” My Lord படக்குழுவைப் பாராட்டிய மாரி செல்வராஜ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா?

கொடூரமான போதை கலாசாரத்தின் மீது நடவடிக்கை: மாரி செல்வராஜ் கோரிக்கை!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

