வித் லவ் - திரை விமர்சனம்!
நடிகர்கள் அபிஷன் ஜீவிந், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவான வித் லவ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மூலம் இயக்குநராக கலக்கிய அபிஷன் ஜீவிந் அப்படத்திலேயே சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, வித் லவ் மூலம் கதாநாயகனாகத் திரைக்கு அறிமுகமாகியுள்ளார். கதை என்ன?
சென்னையில் தனியாக வசித்துவரும் நாயகன் சத்யசீலன் (அபிஷன்) திருமண வரனுக்காக பெண் ஒருவரைச் சந்திக்க செல்கிறார். அங்கு காத்திருக்கும் நாயகி அனஸ்வரா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் துவங்க, ஒருகட்டத்தில் இருவரும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்பது தெரிய வருகிறது. பள்ளிக்காலத்தில் இருவருக்கும் இருந்த வேறு வேறு ஒருதலைக் காதல் குறித்து பேசப்படுகிறது. உடனே, நாயகி அனஸ்வரா நாம் திரும்ப பள்ளிக்கால காதலர்களைச் சந்தித்து அவரவர் காதலைச் சொல்வோம் என்கிறார். இருவரும் பள்ளிக்கால காதலர்களைச் சந்தித்தனரா? நாயகனுக்கும் நாயகிக்கும் மனமாறுதல்கள் என்னென்ன? என்கிற கதையே வித் லவ்.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கிய இப்படம் சில காட்சிகளாலும் கதையமைப்பாலும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. அபிஷனுக்கும் அனஸ்வராவுக்கும் இடையேயான அறிமுக காட்சியிலிருந்து விரியும் கதையில் சில திருப்புமுனைகள் இருப்பதால் இறுதிவரை அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்புடனே திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதும் நன்றாக இருந்தது.
தமிழ் சினிமாவில் விதவிதமான காதல் கதைகள் வந்துவிட்டன. இன்றைய 2கே தலைமுறைக்கு ஏற்ப வித்தியாசமான கதைக்களங்கள் கொண்டவை நல்ல வரவேற்பைப் பெற்று வரும் சூழலில் வித் லவ் அதற்கான தருணங்களைக் கொண்டுள்ளது. சாதாரண காதல் கதையாக இருந்தாலும் உருவாக்கத்தில் சுவாரஸ்யமான படமாக மாறுகிறது. சில காட்சிகளுக்கான வசனங்கள் சிரிப்பை வரவழைப்பதும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம் வாழ்வில் வரும் அழகும் நன்றாக இருக்கின்றன.

ஆனால், காதல் கதையில் உணர்வுப்பூர்வமான விஷயம் எங்கே எனத் தேட வேண்டியிருப்பது பெரிய பலவீனம். மேலோட்டமாக சொல்லப்பட்ட உணர்வுகளாவே கதை இருப்பதால் கதாபாத்திரங்களின் மன ஓட்டங்கள் சரியாகக் கடத்தப்படவில்லை. முக்கியமாக, செயற்கையாகத் துறுத்தும் காட்சிகளால் நல்ல படமாக வந்திருக்க வேண்டிய வித் லவ் பார்க்கலாம் என்கிற இடத்திற்கு வந்துவிட்டது.
பள்ளிக்காலத்தில் அன்ஸ்வராவின் செயல்கள் ரசிக்க வைத்தாலும் சொந்த குரலில் டப்பிங் பேசியதால் கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மையில் குறை தெரிகிறது.
நடிகராக அபிஷன் கதைக்கு பலமாக இருந்திருக்கிறார்; பலவீனமாகவும் உள்ளார். சாதாரண உணர்ச்சிகளைத் தன் முகபாவனைகளால் வீணடித்ததுபோல் அதீத நடிப்பைக் கொடுத்து சோதிக்கிறார். கொஞ்சம் ஓவர் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், நடிக்கிறார். தொடர்ந்து, நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தைரியமாகத் தேர்வு செய்து நடிக்கலாம். இயல்பான முகம் என்பதால், எங்கு? எப்படி? நடிக்க வேண்டும் எனப் புரிந்தால் வெல்லலாம்.
அனஸ்வரா தமிழுக்கு முதல்முறையாக இப்படம் மூலம் வருகிறார். ஆனாலும், தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமான ஆள் என்பதுபோல பல நல்ல மலையாளப் படங்களில் நடித்து அசத்திவிட்டார். இப்படத்திலும் ரசிக்க வைக்கும் அழகுடன் நடித்திருக்கிறார். இருந்தும், டப்பிங் ஒரு குறை.
அறிமுக இயக்குநர், அறிமுக கதாநாயகன் படமாக இருந்தாலும் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஷ், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் என திறமையான ஆள்களுடன் களத்திற்கு வந்த வித் லவ் சில குறைகளுடன் இருந்தாலும் காதலர் தின வெளியீட்டுகான படமாகவே உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!

ரூ. 70 கோடி வசூலித்த யூத்!

காதல் பூக்கும் காலத்தில்... யூத் - திரை விமர்சனம்!
ஓடிடியில் வித் லவ் எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

