

திரைக்கே வராத ரீமேக் திரைப்படத்திற்கு 3 மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் தாமதித்த மாநில விருதுகளுக்கான பட்டியல் அண்மையில் வெளியானது. இதில், 2016 - 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் வெளியான திரைப்படங்களுக்கான சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த விருது அறிவிப்பு சிலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பெரும்பாலான தமிழ் படைப்பாளிகளுக்கு அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. காரணம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பல திரைப்படங்களுக்கு ஒரு விருதுகூட கிடைக்கவில்லை.
மாறாக, சில மோசமான திரைப்படங்கள் தேர்வாகியிருந்தன. இதிலும் குறிப்பாக, நடிகர்கள் விமல், ஸ்ரேயா நடிப்பில் உருவான ‘சண்டக்காரி’ என்கிற திரைப்படத்திற்கு 2020 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது சிறந்த திரைப்படம், சிறந்த பாடகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது திரைத்துறையினரிடம் அதிர்ச்சியையே உண்டாகியுள்ளது. காரணம், இந்த சண்டக்காரி திரைப்படம் மலையாளத்தில் உருவான, ‘மை பாஸ்’ என்கிற திரைப்படத்தின் ரீமேக் எனக் கூறுகின்றனர். ஒரு ரீமேக் படத்திற்கு எதற்கு மாநில விருதுகள்?
சரி, இன்னொரு அதிர்ச்சி இருக்கிறது. என்ன? சண்டக்காரி இன்னும் திரையரங்குகளில் வெளியாகவேவில்லை. எந்த ஓடிடியிலும் இல்லை. பிறகு எப்படி விருது அறிவிக்கப்பட்டது?
இயக்குநர் ராம் இயக்கிய பேரன்பு திரைப்படத்திற்கு ஒரு விருதுகூட அறிவிக்கப்படவில்லை. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற சார்பட்டா பரம்பரை படத்திற்கு ஒரு விருது மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கேரளம்: கடன் தொல்லையால் மாநில விருது வென்ற விவசாயி தற்கொலை

சூா்யா, ஏ.ஆா்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு திரைப்பட விருது : துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

நடிகர் மம்மூட்டி பத்ம பூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ!

டிரைலர் வெளியீட்டு விழா: கோபத்துடன் வெளியேறிய நானா படேகர்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


