8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

விடாமல் உற்சாகக் குரல் கொடுத்த ரசிகர்கள்... கண்கலங்கிய ருக்மணி வசந்த்!

நடிகை ருக்மணி வசந்துக்கு சென்னையில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது...

ருக்மணி வசந்த்

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:38 pm IST

சென்னையில் டாக்ஸிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ருக்மணி வசந்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக். 1940-களில் கோவாவை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கான முன்வெளியிட்டு நிகழ்வு ஹைதராபாத்தைத் தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஆக. 24) நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் யஷ், இயக்குநர் கீது மோகன் தாஸ், ருக்மணி வசந்த் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேச, நடிகை ருக்மணி வசந்த் மேடைக்கு வந்ததும் தமிழ் ரசிகர்கள் ஆரவாரமாக குரல் எழுப்பினர். உச்ச நடிகர்களுக்கு இணையாக ருக்மணிக்கு ரசிகர்களிடமிருந்து சப்தம் எழுந்தததால் படக்குழுவினரே ஆச்சரியப்பட்டனர்.

மேலும்,”உங்கள் அன்பைக் கண்டு அழுகையே வருகிறது; நான் பேசட்டுமா?” என ருக்மணி கேட்டதற்குப் பின்பே ரசிகர்கள் உற்சாகக் குரலைக் குறைத்தனர். ஒரு கன்னட நடிகைக்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருப்பதால் இனி தமிழ்த் திரைப்படங்களிலும் ருக்மணியை அடிக்கடி பார்க்கலாம் எனத் தெரிகிறது.

Actress Rukmini Vasanth received a grand welcome when she attended the 'Toxic' event in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.