பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஒரே ஆண்டில் இரண்டு ரூ. 200 கோடி வசூல் திரைப்படங்களைக் கொடுத்த சூர்யா!

நடிகர் சூர்யா அடுத்தடுத்து பெரிய வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார்...

Published On :24 ஆகஸ்ட் 2026, 12:14 pm IST

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்திற்குக் கிடைத்த நல்ல விமர்சனங்களால் தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஜாலியான கமர்சியல் குடும்பத் திரைப்படமாகவும் அதே நேரம் உணர்வுப்பூர்வமாக இதன் கதை எழுதப்பட்டிருந்ததால், இப்படம் இதுவரை உலக அளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த கருப்பு திரைப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

இதனால், சில ஆண்டுகளாக திரையரங்கில் பெரிய ஹிட் இல்லாமல் இருந்த சூர்யா, ஒரே ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு ரூ. 200 கோடிக்கும் அதிகமான வசூல் திரைப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் வலுவான மார்க்கெட் உள்ள நடிகராகியுள்ளார்.

இந்த தீபாவளிக்கு சூர்யாவின் 47-வது திரைப்படம் வெளியாகி அதுவும் வெற்றியைப் பெற்றால் சூர்யா ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவார்.

Actor Suriya's film Viswanath and Sons has also grossed over ₹200 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.