பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஓணம் வெளியீட்டில் பிருத்விராஜை மூன்றாவது முறையாக வென்ற நிவின் பாலி!

நடிகர் நிவின் பாலியின் ஓணம் வெளியீட்டுத் திரைப்படம் ஹிட் அடித்துள்ளது...

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:48 pm IST

நடிகர் நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் வெற்றியை நோக்கி சென்றுள்ளது.

இந்தாண்டு ஓணத்திற்கு நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான கலிஃபா, நிவின் பாலி நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய படங்கள் வெளியாகின.

இதில், பிருத்விராஜின் கலிஃபா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனால், வணிக ரீதியாக ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளது. மேலும், நடிகர் நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், இந்த ஓணம் வெளியீட்டில் நிவின் பாலியே முன்னணியில் உள்ளார்.

முன்னதாக, 2017 ஆம் ஆண்டு ஓணத்தின் போது, நடிகர் பிருத்விராஜின் ஆடம் ஜோனும் நிவின் பாலியின் நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள திரைப்படங்கள் வெளியாகின. அதில், நிவின் பாலியின் படமே வெற்றிப்படமானது.

தொடர்ந்து, 2019-ல் பிருத்விராஜ் நடித்த ப்ரதர்ஸ் டேவும் நிவின் பாலி நடித்த லவ் ஆக்‌ஷன் டிராமா ஆகிய திரைப்படங்களும் வெளியாகின. இதிலும், நிவின் பாலியின் படமே பிளாக்பஸ்டர் ஆக, பிருத்விராஜ் படம் தோல்விப்படமானது. இந்த வகையில், நிவின் பாலியே தொடர்ந்து ஓணம் வெற்றியைக் கொடுத்துள்ளார்.

Nivin Pauly's 'Bethlehem kudumba unit' is heading towards success.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.