ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒரு வெள்ளிக்கிழமை எல்லாவற்றையும் மாற்றிவிடும்: நடிகர் யஷ்

நட்சத்திர அடையாளம் குறித்து மனம் திறந்த யஷ்...

நடிகர் யஷ்

Published On :18 ஆகஸ்ட் 2026, 1:43 pm IST

நடிகர் யஷ் தன்னுடைய பான் இந்திய அடையாளம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் யாஷ் தனது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grownups ) படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கீதா மோகன்தாஸ் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் யஷ்ஷிடம், “நடிகர்கள் விஜய், அல்லு அர்ஜுன், ராம் சரண் ஆகியோருக்கு முன்பாகவே உங்களுக்கு பான் இந்திய நடிகர் அடையாளம் கிடைத்துவிட்டது. அதனை எப்படி பார்க்கிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.

இதற்கு நடிகர் யஷ், “எவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை எல்லாவற்றையும் மாற்றிவிடும். ஒரு திரைப்படம் சரியாக ஓடவில்லை என்றால் பான் இந்திய நடிகர் என்கிற அடையாளம் காணாமல் போய்விடும்.” என்றார்.

மேலும், முத்தக்காட்சிகளில் நடித்தது குறித்து பேசிய யஷ், “முத்தக்காட்சிகளில் நடித்ததை என் மனைவி விரும்பியிருக்க மாட்டார் எனத் தெரியும். ஆனால், கதைக்குத் தேவைப்படுவதால் அக்காட்சி இடம்பெறுகிறது. அவரும் ஒரு நடிகையாக இருந்தவர் என்பதால் என்னைப் புரிந்துகொள்கிறார். சில நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது எனக்கும் அசௌகரியமாகத்தான் இருக்கும். அந்தக் காட்சிகளில் நடிப்பது எளிதல்ல. ஆனால், அவை கதைக்குத் தேவையாக இருப்பதால் அப்படி நடிக்க வேண்டியது அவசியமாகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Yash has spoken about his pan-Indian identity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.