ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் பெயர் மாற்றம்!

ரியோ நடித்துள்ள ராம் இன் லீலா படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராம் அண்ட் லீலா படத்தின் போஸ்டர்

Published On :18 ஆகஸ்ட் 2026, 8:14 pm IST

ரியோ நடித்துள்ள ராம் இன் லீலா படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ நடித்துள்ள புதிய படம் ராம் இன் லீலா. இதில், நாயகியாக அறிமுக நடிகை வர்திகா நடித்துள்ளார். அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.

ரியோ கடைசியாக நடித்த ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலைப் பெற்று வணிக ரீதியாக வெற்றி பெற்றன. இதனால், இப்படத்தின் ஓடிடி உரிமை அமேசான் பிரைம் தளத்திற்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில் டிரைலரும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் வருகிற ஆக. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் பெயரை மாற்ற தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது.

ராம் இன் லீலா என்ற பெயர் ஹிந்து மதக் கடவுளைக் குறிக்கும் விதத்தில் இருப்பதாகத் தணிக்கை வாரியம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ராம் இன் லீலா என்ற பெயரை ராம் அண்ட் லீலா என பெயர் மாற்றம் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

Story image

Summary

The name of the film Ram In Leela starring Rio has been changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.