ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மோகன்லால் வெளியிட்ட 7 இயக்குநர்களின் பெயர்கள்..! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

அடுத்தடுத்த 7 திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்கள் பட்டியலை வெளியிட்ட நடிகர் மோகன்லாலின் பதிவு குறித்து...

Actor Mohanlal

நடிகர் மோகன்லால் - படம்: எக்ஸ் / மோகன்லால்

Published On :18 ஆகஸ்ட் 2026, 7:03 pm IST

நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் பக்கத்தில் அடுத்தடுத்த ஏழு திரைப்படங்களை இயக்கும் ஏழு இயக்குநர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தின் மிக முக்கியமான நடிகராக இருக்கும் மோகன்லால் தனது அடுத்த ஏழு திரைப்பட அப்டேட்டுகளை அளித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

கடைசியாக மோகன்லால் நடிப்பில் த்ரிஷ்யம் 3 படம் வெளியானது. இதற்கு பிறகு அவரது மகளின் துடக்கம் என்ற படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது பல படங்களின் கதையைக் கேட்டுவரும் மோகன்லால் இதுவரை ஏழு இயக்குநர்களின் கதையை இறுதி செய்துள்ளார். அந்த விவரங்களை தனது எக்ஸ் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

ஏழு இயக்குநர்கள் - விஷ்ணு மோகன், பிரியதர்ஷன், திலீஷ் போதன், சத்யன் அந்திகாட், ஜூட் ஆண்டனி ஜோசப், ஜீத்து ஜோசப் ஆகியோரின் படங்களில் நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்தப் பட்டியலில் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஏற்கனவே நடித்து வருவதும் மற்ற படங்களுக்கான முன் தயாரிப்பு பணிகளும் விருவிருப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பல படங்களை அவரே தயாரிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திலீஷ் போத்தன் நெடுங்கண்டம் மிராக்கல் எனும் படத்தினை இயக்குகிறார். மகேஷிண்ட பிரதிகாரம் படம் தேசிய விருது உள்பட பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Mohanlal share seven directors name and says to feature exciting journeys and some very special filmmakers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.