ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சோனி விழா - தொலைக்காட்சியில் புதிய சேனல்!

சோனி விழா என்கிற புதிய சேனல் அறிமுகமாகிறது...

நடிகை சமந்தா

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:30 pm IST

சோனி நிறுவனத்தின் தமிழ் சேனலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களின் எழுச்சி மிகப் பிரம்மாண்டமாக இருந்தாலும், இந்தியத் தொலைக்காட்சிக்கான ரசிகர்கள் பட்டாளமும் பெரியளவில் உள்ளன. இதனால், தொலைக்காட்சித் தொடர்களை, நிகழ்ச்சிகளைப் பார்க்கும் கோடிக்கணக்கான பார்வையாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

தற்போது, தமிழ்த் தொலைக்காட்சியில் சோனி நிறுவனம் தன்னுடைய சோனி விழா என்கிற புதிய சேனலை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன், முதல் நிகழ்ச்சியாக நடிகை சமந்தா நடுவராக பங்கேற்கும் மாஸ்டர் செப் (master chef) சமையல் நிகழ்ச்சிக்கான டீசரையும் வெளியிட்டு உள்ளனர். |

இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தீபாவளியன்று இந்த சேனலை அறிமுகப்படுத்தலாம் எனத் தெரிகிறது.

அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் இந்த சேனலில் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sony is set to launch its Tamil channel soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.